திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்-இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை!!

திருகோணமலை - திருக்கோணேஸ்வர ஆலய  நிர்வாகத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இருதரப்பினரும் சமாதானமாக முடித்துக் கொள்வதற்கு முன் வர வேண்டுமென சமூக ஆர்வலர்களும், சமய பெரியார்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த மூன்று சமயப் பெரியார்கள் முன்னிலையில் இந்த வழக்கை எவ்வாறு இணக்கமாக முடித்துக் கொள்வது பற்றி ஆராய்வதற்காக முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இணக்கப்பாடு தொடர்பில் ஓரிரு  நாட்களுக்குள்  சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆலயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த இரு தரப்பினரையும் சமாதானமாக வழக்கை முடித்துக் கொள்வதற்கு முன் வருமாறும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

இச்செய்தியானது திருகோணமலை சைவ மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து இடங்களில் வாழும் சைவ மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக காணப்படுகின்றது எனவும் சட்ட ஆர்வலரொருவர் தெரிவித்தார்.


Powered by Blogger.