துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம்!!

கொழும்பு – ஜம்பட்டாவீதி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஜிந்துப்பிட்டி பகுதியிலுள்ள இறைச்சி விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரான 57 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Powered by Blogger.