பூகம்பத்தினால் இலங்கைக்கு தற்போது எந்த சுனாமி ஆபத்தும் இல்லையென சற்று முன்னர் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு இலங்கையின் கரையோரப்பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்படுவதாகவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அதிகாரம் பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து வெளியிடப்படும் அறிவிப்பாகுமென பொது மக்களுக்கு அறியத்தருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால், இலங்கையின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மேலதிக அறிவிப்புகளுக்கு விழிப்புடன் இருக்க வேண்டுமென தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் ஏலவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.