அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் 7 ஆம் கட்ட ஆரம்ப நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (30) திகதி இடம் பெற்றது.
உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக் கற்கை நெறி அமையவுள்ளது.
150 மணித்தியாலங்களைக் உள்ளடக்கிய இக்கற்கை நெறியில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆரம்ப நிகழ்விற்கு மாவட்ட செயலகத்தின் இரண்டாம் மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார், பயிற்சி நெறியின் வளவாளர்களான செல்வி.எம்.கே.திலினி மதுசிகா, திருமதி.சுதேசி தில்ருக்சி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி நெறியினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.