மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சமாதான நீதவான்களுக்கு கருத்தரங்கு!!


மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையம் மண்முனை தென்எருவில்பற்று - களுவாஞ்சிகுடி மற்றும் போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் சமாதான நீதவான்களுக்காக கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது.

குறித்த கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் அவர்களது தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. 

மேற்படி பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் அதிகளவிலான சமாதான நீதவான்கள் சமூகமளித்து பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உபதலைவரும் சட்டத்தரணியுமான அன்பழகன் குருஸ்  செயற்பாட்டு விளக்க உரையினை மேற்கொண்டிருந்ததுடன்,
இதன்போது சமாதான நீதவான்களின் நியமனம், சமாதான நீதவான்களின் வகைகள் மற்றும் சமாதான நீதவான்களின பொறுப்புக்களும் கடமைகளும் என்பன தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன்,
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் செயலாளர், பொருளாளர், ஊடக இணைப்பாளர், பிராந்திய இணைப்பாளர்கள் உள்ளிட்ட  நிருவாக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிருவாக சபை கூட்டம் களுவாஞ்சிகுடி "சோலையகத்தில்" இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.