மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை காணவில்லை!!

வவுனியா - நெலுக்குளம், ராசேந்திரகுளம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

நெலுக்குளம் - பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வருடமும் 11 மாதங்களுமான பெண் குழந்தையின் சடலமே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சில குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டிற்கு அருகிலிருந்த நீர்த்தாங்கியில் வீழ்ந்து கடந்த 25 ஆம் திகதி குறித்த குழந்தை உயிரிழந்தது.

இந்த நிலையில், அதற்கடுத்த நாள் 26 ஆம் திகதி குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது சடலத்தை காணவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.


Powered by Blogger.