கடைசி சுப்பர் மூன் இன்று தோன்றுகிறது!!


இன்று (29) தோன்றும் முழு நிலவு இந்த வருடத்தின் நான்காவது மற்றும் கடைசி சுப்பர் மூன் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுப்பர் முன் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் அறுவடை நிலவு என்றும் அழைக்கப்படுகிறது.

பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலா, ஒரு புள்ளியில் பூமிக்கு அருகிலும், மற்றொரு புள்ளியில் தூரத்திலும் சுற்றி வரும்.

அப்போது, பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது, முழுநிலவாக தெரியும் நிகழ்வு தான் சுப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. இது மற்ற நேரங்களை விட, சற்று 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும்.

ஆண்டுதோறும் 3 அல்லது 4 சுப்பர் மூன்கள் தோன்றும். அதன்படி, இந்தாண்டும் 4 சுப்பர் மூன்கள் தோன்றுகின்றன.
Powered by Blogger.