"விளையாட்டின் ஊடான அபிவிருத்தி" கிரிக்கெட் போட்டியில் - கல்குடா “வளர்நிலா சிறுவர் கழக” அணி சம்பியன்!!


செரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் "விளையாட்டின் ஊடான அபிவிருத்தி" எனும் தொனிப்பொருளில் சிறுவர்களிடத்தே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான மாவட்ட மட்ட பெண்கள் கிரிக்கெட் போட்டியானது மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்தப்பட்டது. 

இதில் காத்தான்குடி, மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அணிகள் பங்குபற்றின. இதில் கோறளைப்பற்று வாழைச்சேனை கல்குடா “வளர்நிலா சிறுவர் கழக” வீராங்கனைகள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர். 

இறுதிப் போட்டியில்  “வளர்நிலா சிறுவர் கழக” அணி 53 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடி 4 ஓவர்கள் நிறைவில் எதுவித விக்கட் இழப்பும் இன்றி அபார வெற்றியை பெற்றுள்ளதுடன் அடுத்து இடம்பெறவுள்ள மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
Powered by Blogger.