பெரெண்டினா நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!!


பெரெண்டினா  நிறுவனத்தினால்  வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கும் "உங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும்... லைஃப் லைன்" நிகழ்வு செங்கலடி கிளையின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (18) திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவினையும் வழங்கி வைத்துள்ளார்.

பெரெண்டினா தன்னார்வ மற்றும் நிதி நிறுவனத்தின் மூலம்  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மாவட்டத்தில்  போசாக்கு குறைபாட்டை  நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு செயற்றிட்டம் பெரண்டினா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 6 கிளைகளுடன் 13000 த்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட இந் நிறுவனத்தினால் வாழைச்சேனை , செங்கலடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களிற்கு மொத்தமாக 45 மில்லியன் ரூபாய்  நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.  

இந் நிறுவனத்தினால்  மாவட்டத்தில் உணவு தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக  வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதன் மூலம் தமது  அன்றாட உணவு தேவையை புர்த்தி செய்வதற்கான   உதவிகள் செய்துவருவது மட்டுமல்லாது செய்கைக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வின் போது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதாகரன், பெரெண்டினா நுண்நிதி  நிறுவன பிரதேச முகாமையாளர் பா.பிரதிலிபன், பெரெண்டினா நிறுவனத்தின் செங்கலடி முகாமையாளர் எஸ்.செந்துரன், பயனாளிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

இன்று இடம்பெற்ற முதற்கட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் 40 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைத்துள்ளதுடன் 1900 பயனாளிகளுக்காக மொத்தமாக சுமார்  67 மில்லியன் ரூபாய் நிதி செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.