தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா தீர்த்தோற்சவத்துடன் நிறைவு!!


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிகு சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா தீர்த்தோற்சவத்துடன் இன்று நிறைவடைந்துள்ளது.

ஆலயத்தின் வருடாந்த திருவிழாவானது கடந்த 12.07.2023 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 நாட்களாக பல்வேறு கிராம மக்களினால் திருவிழாக்கள் நடைபெற்று இன்று (02) திகதி அதிகாலை தீர்த்தோற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது. 

சிவஸ்ரீ மு.க.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த திருவிழா மகோற்சவத்தில் நாட்டில் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.