மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்டு - பொது மக்களிடம் உதவி கோரும் பொலிசார்


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார் வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பார் வீதியில் உள்ள நீர் நிலையொன்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபரை அடையாளம் காண்பதற்காக உதவி புரியுமாறு மட்டக்களப்பு பொலிசார் பொது மக்களிடம் கேரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (10) திகதி காலை அப்பகுதி மக்கள் குறித்த சடலத்தை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிசார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிசாரும் இணைந்து சடலம் தொடர்பான விசாரனைகளை முன்னெடுத்துவருகின்றனர்.








கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.