மாஹீர் எழுதிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் தாபன முகாமைத்துவமும் நடைமுறைகளும் நூல் அறிமுக விழா!!


கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹீர் எழுதிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் தாபன முகாமைத்துவமும் நடைமுறைகளும் எனும் நூல் அறிமுக விழா (21) வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் நடைபெற்றது.

அஷ;ஷஹீத் அல்ஹாஜ் ஏ அகமட் லெவ்வை ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் இந்த நூல் அறிமுக விழா நடைபெற்றது..

இந்த விழாவின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முன்னாளள் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறீதரன் ஆகியோர் விஷேட விருந்தினர்களாகவும் காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன், இறைவரித்திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹீர் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.ஹாறூன் உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நூலாசிரியர் கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹீர் அவர்களுக்கு அஷ;ஷஹீத் அல்ஹாஜ் ஏ அகமட் லெவ்வை ஞாபகார்த்த நிறுவனம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை ஆகிய நிறுவனங்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவித்து நினைவுச்சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.

விழாவில் நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை ஓய்வு பெற்ற அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் நிகழ்த்தியதுடன் நூல் அறிமுக உரையை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.அன்சார் நழீமி நிகழ்த்தினார்.

இதன் போது நூலின் சிறப்பு பிரதிகளும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.Powered by Blogger.