சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்திருந்தார்.
சென்னையிலிருந்து மாலைதீவுக்கு செல்லும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அவர், குறித்த விமானம் இலங்கை ஊடாக செல்லும் நிலையில், இலங்கை விமான நிலையத்தில் ஒரு சில மணித்தியாலங்கள் தங்க நேரிட்டுள்ளது.
இலங்கை வந்த அவரை, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வரவேற்றிருந்தது.
இது தொடர்பான புகைப்படங்களையும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது.
அதில் ஒரு புகைப்படத்தில் விமானத்திற்கு முன்னால் மிக எளிமையான முறையில் சிறிய பயணப்பொதியுடன் சிரித்தவாறு போஸ் குடுத்தவாறு நிற்கின்றார்.
மற்றொரு புகைப்படத்தில் வரவேற்கப்பட்ட அவர், இரு விமானப் பணிப்பெண்களுக்கு நடுவில் மலர்செண்டுடன் நிற்கின்றார்.
குறித்த பயணத்தில் ஞாபகார்த்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக, நிறுவனம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தமது விமானத்தில் பயணித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், தமது விமானத்தில் அவர் பயணிப்பதை ஒரு கௌரவமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பதோடு, குறித்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த திரைப்படத்தில் இடம்பெறும் பாடலொன்றின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.