கிழக்கு மாகாண ஆளுநரினால் மக்கள் பாவனைக்காக வீதி திறந்துவைப்பு!!


மட்டக்களப்பு மாநக சபை எல்லைக்குட்பட்ட கொக்குவில் - சத்துருகொண்டான் - தன்னாமுனை ஆகியவற்றை இணைக்கும் காபட் வீதி இன்று கிழக்கு மாகாண ஆளுநரினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் TCAMP - PRDP நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக சுமார் 7 மில்லியன் செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மேற்பார்வையோடு புனரமைக்கப்பட்ட குறித்த வீதியானது இன்று 12.07.2023 ஆந் திகதி புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விசேட அதிதியாகவும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூ,பிரசாந்தன் சிறப்பு அதிதியாகவும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மட்டக்களப்பு மாநகர சபையில் ஆணையாளர் எந்திரி நடராஜா சிவலிங்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு குறித்த வீதியினை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மாவடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலய வளாகத்தில் குறித்த பகுதியை சேர்ந்த மக்களின் குறைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அவற்றிற்கான தீர்வினை மிக விரைவில் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
Powered by Blogger.