மட்டக்களப்பு- முதலைக்குடா அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவப் பெருவிழா- 2023!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பிரதேசத்திற்கு உட்பட்ட முதலூர் என சிறப்பித்து அழைக்கப்படும் முதலைக்குடா கிராமத்தில் அமைந்து அருள் மழை பொலியும் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது எதிர்வரும் 2023/07/17 (திங்கள் கிழமை) ஆரம்பமாகி 2023/07/23 (சனிக் கிழமை) அதிகாலை 5:30 மணிக்கு கடற்குளிப்பினைத் தொடர்ந்து தீ மிதிப்புடன் இனிதே நிறைவடையவுள்ளது.

ஆலய நிகழ்வுகள்
2023/07/17 (திங்கள் கிழமை) 
இரவு பூர்வாங்க கிரிகைகள் இடம்பெற்று நள்ளிரவு 12:00 மணியளவில் திருக்கும்பம் வைத்தல்

2023/07/18 (செவ்வாய்க் கிழமை)
பிற்பகல் 2:30 மணிக்கு பகல் சடங்கும் அதனைத் தொடர்ந்து மகர தோரணம் வலம்வரும் காட்சியும் இரவு சடங்கும் நடைபெறும்.

அன்றைய இரவினைச் சிறப்பிக்கும் முகமாக முதலைக்குடாவில் புதிதாக பழக்கப்பட்ட “சித்திர புத்திரர்” எனும் கரகாட்டமும் இடம்பெறும்.

2023/07/19 (புதன் கிழமை) 
பிற்பகல் 2:30 மணிக்கு பகல் சடங்கும் அதன் பின்னர் இரவுச் சடங்கு இடம்பெறும்.

அன்றைய தினத்தினை சிறப்பிக்கும் முகமாக ஆலய பரிபாலன சபை, காளி இந்து இளைஞர் மன்றம், ஏகதந்தன் இந்து இளைஞர், காளி இந்து மகளீர் மன்றத்தினர் இணைந்து வழங்கும் “கலை நிகழ்வுகள்” இடம்பெறும்.

2023/07/20 (வியாழக் கிழமை) 
பிற்பகல் 2:30 மணியளவில் பகல் சடங்கும் இடம்பெறும்.

அன்றைய இரவினைச் சிறப்பிக்கும் முகமாக இலங்கையின் பிரமாண்ட இசைக்குழுவாகிய “சரிகம்பா” இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறும்.

2023/07/21 (வெள்ளிக் கிழமை) 
காலை 7:00 மணியளவில் முதலைக்குடா பாலையடி விநாயகர் கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து தீக்கட்டை எழுந்தருளப் பண்ணல் வைபவமும், பிற்பகல் 2:30 மணியளவில் பகல் சடங்கும் விநாயகப்பானைக்கு நெல்குற்றும் வைபவமும் தீக்குழி மூட்டும் நிகழ்வும் விநாயகப்பானை எழுந்தருளச் செய்யும் நிகழ்வும் இடம்பெறும்.

அன்றைய இரவினைச் சிறப்பிக்கும்முகமாக கன்னங்குடாவில் புதிதாக பழகிய “சத்தியவான் சாவத்திரி” தென்மோடி நாட்டுக்கூத்தும்இடம்பெறும்.

2023/07/22 (சனிக் கிழமை)
அதிகாலை 5:30 மணியளவில் கடற்குளிப்பும் அதன் பின்னர் தீ மிதிப்பும் பள்ளையப் பூசையும் மதியம் சக்கரை அமுதுப் பூசையுடன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இனிதேநிறைவு பெறும்.



Powered by Blogger.