பெரும்போகம் முதல் விவசாயிகளுக்கு உர நிவாரணம்!!


எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து ஒரு மூட்டை யூரியா உரம் 5,000 ரூபாவிற்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

03 பயிர்ச்செய்கைக் காலங்களின் பின்னர் இப்பருவத்தில் விவசாயிகளுக்கு உரம், யூரியா உரம் மற்றும் பண்டி உரம் ஆகிய மூன்று வகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வார இறுதியில் 22,500 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று இலங்கை வந்ததாகவும், அதன்படி இன்று (12) முதல் அனைத்து விவசாய நிலையங்களுக்கும் உரம் விடுவிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது

Powered by Blogger.