சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு அறிவித்தல்!!


இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலதிக நேரச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கடந்த 4 மாதங்களில் அரசாங்க விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.