கிழக்கில் சுரங்கம், மணல் அகழ்வு அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டு- ஆளுநர் விடுத்த உத்தரவு!!


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருடன் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அதிகமாக சுரங்கம் மற்றும் மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்று வருவதால் தற்போது காணப்படும் பொறிமுறை குறித்து விளக்கம் அளிக்குமாறும், சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் அகழ்வுகள் தொடர்ந்தும் நிலவி வருவதால் அது குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறும் அரச அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

Powered by Blogger.