கதிர்காமத்தில் இருந்து சென்ற பஸ் சம்மாந்துறையில் விபத்து : 9 பேர் காயம்

சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் இன்று (21) காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Powered by Blogger.