எரிபொருள் விநியோகத்திற்கு மேலும் ஓர் நிறுனம்!!


இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அரசாங்கமும் RM Parks Incம் கையெழுத்திட்டுள்ளன.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளை அடுத்து, இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் ஒன்றிற்காக ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc.க்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்ததையடுத்து, இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க ஏனைய இரண்டு நிறுவனங்களும் இணங்கியுள்ளன.

Powered by Blogger.