தமிழ் மன்னன் சங்கிலியனின் 404ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!


யாழ்ப்பாண ராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் 404 ஆவது நினைவு தினம் நேற்று யாழில் நினைவுகூறப்பட்டது.

யாழ்ப்பாணம் முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை சிவசேனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மத தலைவர்கள், அரச அதிகாரிகள் கல்விமான்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் சங்கிலியன் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று குறித்த குழுவினர் சங்கிலியன் மன்னனினால் கட்டப்பட்ட யமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலிய மன்னனுக்காக அஞ்சலி செலுத்தினர்.


Powered by Blogger.