ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33வது தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வு!!


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33வது தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) திகதி மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித் தலைவருமான இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வில், உயிரிழந்தவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னால் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர் பொன்.செல்லத்துரை (கேசவன்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னால் உறுப்பினர்கள், உயிர்நீத்தவர்களின் உறவுகள், மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.