மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியின் 148 ஆண்டை சிறப்பிக்கும் முகமாக மட்டு நகரில் நடைபவனி!!


(இ.நிரோசன்)

மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பெண்கள் தேசிய பாடசாலையின் 2023 ஆண்டில் தமது 148 ஆவது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக (29) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் மட்டு நகரில் நடைபவனி இடம்பெற்றது.

மட்டக்களப்பில் மகாஜன கல்லூரி வரலாற்றுப்பதிவு செய்த ஸ்தாபகர் ஜோன் ஹில்னக் அடிகளாரினால் 1875 ஆனி 29 திகதி பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டது அன்றிலிருந்து இன்று 148 ஆண்டுகளாக நிறைவடைந்தது அதை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் அதிபர் எஸ். சாந்தகுமார் தலைமையில் இடம் பெற்றது.

இவ் நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கடந்த மாதம் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இடம்பெற்ற மேலேத்தேய பேண்ட் வாத்திய போட்டியில் மட்டக்களப்பில் உள்ள பல தேசிய பாடசாலைகள் போட்டியிட்டு இருந்தது, அதில் மகாஜன பேண்ட் வாத்திய குழு மூன்றாவது இடத்தை பெற்று இருந்தது . அதனை சிறப்பிக்கும் முகமாக , நடைபவணியின் முன்னால் இக் கல்லூரியின் பேண்ட் வாத்திய அணியினரால் பேண்ட் வாத்தியம் முழங்கியதோடு பழைய மாணவர்களின் நடனங்கள் ஆகியனவும் அனைவரதும் கவனத்தை ஈர்த்தன. 

இதன் போது பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் , பாடசாலை மாணவிகள், பாடசாலையின் பழைய மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.Powered by Blogger.