கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திர காந்தன் தலைமையில் மேற்படி கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மு.ப 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், அமைச்சர், இராஜாங்க அமைச்சர், மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளுராட்சி சபைகளின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.