காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மரணம்!!


காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான தம்புத்தேகம, தெல்ஹிரிய, கமுனுபுர பகுதியைச் சேர்ந்த  59 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

மகள், அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வயலுக்கு அருகில் உள்ள வீட்டில் இவர் வசித்து வந்துள்ளார்.

இது மூன்றாவது யானை தாக்குதலின் மரணம் எனவும் இதற்கு முன்னர் அதே பகுதியில் வனவிலங்கு அதிகாரி மற்றும் விவசாயி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Powered by Blogger.