ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் காந்தி பூங்கா நினைவு தூபியில்!!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காந்தி பூங்கா நினைவு தூபியில் இன்று (21) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா. மதிவண்ணன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ. சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி. ஹெலன் சிவராஜா, நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. கே.பிரேமகுமார் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு விஷேட ஜெப ஆராதனைகளிலும் ஈடுபட்டதுடன் மலர் தூவி, சுடர் ஏற்றி, அஞ்சலியும் செலுத்தினர்.
கடந்த 2019 ம் ஏப்பில் 21 ம் திகதி தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் வரை படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.