உள்ளுராட்சி மன்றத்தேர்தல் குறித்து நாளை வெளியாகவுள்ள விசேட அறிவித்தல்

 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்பாளர் எண்ணிக்கை, பெண்களின் பிரதிநிதித்துவும், வேட்பு மனு கட்டுப்பணத் தொகை உள்ளிட்ட விபரங்கள் இந்த அறிவிப்பில் வெளியிடப்படவுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.