பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த போது குழந்தை பிரசவித்த பெண் வைத்தியசாலையில் இருந்து குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார்.
குறித்த தாயார் ஜூலை 7ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று வரை பொரளை காசல் மகளிர் வைத்தியசாலையில் 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
தனது கணவரின் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு திணைக்களத்திற்கு சென்ற வேளையில், வரிசையில் காத்திருந்த நிலையில் குழந்தையை பிரசவித்தார்.
இந்த நிலையில் அங்கிருந்த இராணுவ அதிகாரிகளின் தலையீட்டில் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாயும் சேயும் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதையடுத்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் குமார் தண்டநாராயணன் தெரிவித்துள்ளார்.