தேர்தலை இழுத்தடிக்கமுடியாது உடனடியாக தேர்தலை நடத்தவேண்டும் பூபாலபிள்ளைபிரசாந்தன்

எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்பதனை மாத்திரம் மையமாக வைத்து வட்டாரங்களையோ சனத்தொகை பரம்பலையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு வட்டாரங்களை அல்லது தொகுதிகளையோ பிரிப்பது பொருத்தமற்ற நடைமுறையாகும் இனகுழுமங்களையும் சமூக கட்டமைப்பினையும் எல்லை நிலப்பரப்புக்களையும் கவனத்திற்கொள்ளாது பிரிப்பது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.





எல்லை நிர்ணயம் என்கின்ற பெயரில் இதுவரையில் மாகாண சபை தேர்தலினை நடத்தமுடியாமல் இழுத்தடிப்புச் செய்வதன் ஊடாக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த எழுத்து மூலமான ஆவணமான மாகாண சபை முறைமையினை; கூட போராடி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய சமுகம் இன்று நுகரமுடியாத சூழல் உருவாகி இருக்கின்றது.



அது மாத்திரமன்றி தொகுதி நிர்ணயத்தின் போது இன மொழி விகிதாசாரங்களை கருத்திற்கொள்ளாது தொகுதிகள் அமைக்கப்பட்டமை கண்டிக்கப்படவேண்டிய விடயம் எனவும் சுட்டிக்காட்டினார்



பிரதேச நிருவாகப்பரப்புக்கள் ஒருபுறமும் உள்ளூராட்சி அதிகாரப்பரப்பு ஒருபுறமும் என்று இருக்கமுடியாது இவை சீராக்கப்படவேண்டும்



2018ம் வருடம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட கலப்பு தேர்தல் முறையானது இருக்கின்ற தேர்தல் முறைகளில் சிறந்ததாக அமைந்ததாலும் அதில் சிறு சிறு பிரச்சனைகளும் சிறு சிறு மாற்றங்களைச் செய்யவேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது. அதனை சீர் செய்யும் வரை தேர்தலினை இழுத்தடிப்புச் செய்யாமல் உடனடியாக தேர்தலை நடத்தவேண்டும்



உள்ளூராட்சி மன்றத்தின் காலங்கள் நிறைவடைவதன் காரணமாக எல்லை நிர்ணயம் என்கின்ற தொனியில் தேர்தலினை இழுத்தடிப்புச் செய்யாமல் இக் கலப்பு தேர்தல் முறையில் மாற்றங்களை செய்யும் வரை தேர்தலினை இழுத்தடிப்புச் செய்யாது விகிதாசார முறையில் தேர்தலினை உடனடியாக நடத்துவதுடன் குறித்த கலப்பு தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்து அடுத்த தேர்தலினை சிறப்பாக நடத்தமுடியும் எனவும் இதுவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடு எனவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளைபிரசாந்தன் தெரிவித்தார்.



நேற்றைய தினம் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பு நில அளவை திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



இக்கலந்துரையாடலில் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் . யோகவேள் தமிழ் பிரதிச் செயலாளர் . பஞ்சலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்








 


கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.