ஜனாதிபதியை சந்தித்த பின்னர் நாடு திரும்பும் ஐ.நா அதிகாரி

 ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் (Hanaa Singer) தனது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) முற்பகல் சந்தித்துள்ளார்.




ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான ஹனா சிங்கர், 2018 செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளராக செயற்பட்டார். 


கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.