செவிப்புலன் வலுவுற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

 மட்டு. துஷாரா  

 

இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் அங்கத்தவர்களின் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு குறித்த நிறுவனத்தின் மட்டிக்களி கூட்ட மண்டபத்தில் 14.12.2022 இல் இடம்பெற்றது.

 

இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலீப்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சித்த ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் மா.நிரஞ்சன் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

 

இந்நிகழ்வில், காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிறுவாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதன்போது, செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவன அங்கத்தவர்களின் 50 குடும்பங்களுக்கு தலா 5000.00 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.