இராஜாங்க
அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனத்துக்குமிடையில்
விசேட சந்திப்பு
கிராமிய வீதிகள்
அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான
சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனத்துக்குமிடையில்
விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்றையதினம் இடம்பெற்ற இச் சந்திப்பில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துறையினை மேம்படுத்துவதற்குரிய எதிர்காலத் திட்டங்கள்
தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக
மாவட்ட விவசாய சம்மேளனத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு தொடர்பாகவும் விரிவாகப் பேசப்பட்டதுடன்
புதிய நிர்வாக சபையின் தலைவராக ரமேஸ் அவர்களை தெரிவு செய்வது தொடர்பாக கலந்தாலோசிக்கட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ரமேஸ் அவர்களை
தலைவராக தெரிவு செய்வதற்கு பூரண ஆதரவினை தாம் வழங்குவதாகவும் ரமேஸ் உடன் இணைந்து மாவட்டத்தின்
விவசாயத்தினை கட்டியெழுப்புவதற்கு பூரண ஒத்துளைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்