கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் விமான நிலைய அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து அங்கொடை ஐ.டி.எச் காய்ச்சல் நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் பணியாற்றி வரும் இந்த அதிகாரி, இத்தாலியில் இருந்து வரும் நபர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளுக்கு உதவி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரச செய்தி திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.