கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!


கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலகட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

புத்தளமும் கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் அதிஆபத்து பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிபபிட்டார்.

இந்தநிலையில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை பொறுமையாக செயற்பட்டால் ஆபத்தில் இருந்து மீளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவது உள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில், 106 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.