தடை செய்யப்பட்ட பொது அமைப்புக்களிற்கும் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை!!
பல தரப்பட்ட அர்ப்பணிப்பின் பின்னரே மாகாண சபை ஆட்சி முழு இலங்கைக்கும் இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றது அந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் வேண்டுகோளொன்றினை இன்று முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஈரோஸ் கட்சியின் ஊடக சந்திப்பில் அதன் தலைவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தடை செய்யப்பட்ட பொது அமைப்புக்களிற்கும் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் அப்போது தான் பல கோடிகளை முதலீட்டாளர்களை நாட்டிற்குள் கொண்டு வர முடியும் இது அனுரலின் அரசினாலே முடியும் என்றார்.
ஈரோசின் பசி தீர்க்கும் புனித பயணம் எதிர்வரும் மாதம் மட்டக்களப்பில் இருந்து வட மாகாணத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. இதனால் பல முன்னால் போராளிகளின் குடும்பங்கள் நன்மையடையவுள்ளது.
ஞானசார தேரர் தொடர்பில் என்ன புரளிகளை ஏற்படுத்தினாலும் ஜனாதிபதி தெளிவாக சொல்லியுள்ளார் சட்டம் அனைவருக்கும் சமம் என்று. இன்று ஞானசார தேரருக்கு 200 தேரர்கள் என்றால் 2000 இற்கும் மேற்பட்ட தேரர்கள் அனுர அரசிற்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.
சர்வ தேசமே இந்த அரசை விரும்புகின்றது, எவராலும் இந்த அரசை அசைக்க முடியாது என்றார்.
