PSTA சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) திகதி மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற குறித்த
கவனயீர்ப்பு போராட்டமானது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் PSTA சட்டமூலத்திற்கு எதிராகவும், PTA வும் வேண்டாம் PSTA யும் வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு காந்தி பூங்கா வளாகத்தில் பேரணியொன்றையும் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.





