இலங்கையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை தொடர்பில் மர்மம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய 106 நபர்களில் 4 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என கொழும்பு வைத்திய பீட சமூக மருத்துவ பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளான 106 பேரில் 102 பேருக்கு, சீனா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மன் உட்பட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டமையினால் கொரோனா தொற்றியுள்ளது.

இதுவரையில் இலங்கையில் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் நால்வர் முழுமையாக குணமடைந்துள்ளனர். எனினும் அவர்கள் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்கு இரண்டு முறை விசேட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு சோதனையிட்ட பின்னர் அவர்கள் அச்சமின்றி வீடு செல்ல முடியும். அவர்களிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Powered by Blogger.