மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் தாக்கல் செய்தது.இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் குறித்த வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்ற போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளின் வேட்பாளர்கள் சகிதம் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இன்று மாவட்ட செயலகத்தில் உள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் கொரோணா தடுப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கத்தினை தலைமை வேட்பாளராக கொண்டு எட்டு உறுப்பினர்கள் கட்சியில் போட்டியிடுகின்றனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் ஐந்து பேரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மூன்று பேரும் புளோட் சார்பில் ஒருவரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.Powered by Blogger.