மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்களுடன் போதைப் பொருள் கடத்திய மூவர் பிடிபட்டனர்ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மாத்திரம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்திற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவந்த லொறியில் இருந்து ஐஸ் போதைப்பொருள், கஞ்சா மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.


இதன் போது வாகன சாரதி உட்பட உதவியாளர்கள் இருவர் அடங்கலாக மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று வாழைச்சேனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டுள்ளதுடன், பிடிபட்ட நபர்கள் காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த அத்தியாவசிய பொருட்களுடன் 13 கிராம் 20 மில்லிலீற்றர் ஜஸ்போதைப் பொருளும், 6 கிராம் 960 மில்லிக்கிராம் கஞ்சாவும், 104 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருட்களை மீட்டதுடன் லொறி சாரதி மற்றும் இரண்டு உதவியாளர்கள் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் லொறி ஒன்றையும் அத்தியாவசிய பொருட்களையும் கைப்பற்றினர்.a
Powered by Blogger.