கண்டியில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டுள்ளார்






கண்டி மாவட்டத்தில் இனம்காணப்பட்டுள்ள முதலாவது கொரோனா வைரஸ் தொற்று சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










அக்குறணை, தெலும்புகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் பாதணி வியாபாரியான குறித்த நபர் கடந்த 12ம் திகதி இந்தியா சென்று 15ம் திகதி நாடு திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி ஏற்பட்ட நிலையில் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





தொடர்ச்சியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படட நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





இதேவேளை, அவரது இல்லத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று இருக்கக்கூடுமென்ற சந்தேகத்தில் தற்போது கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



Powered by Blogger.