மஹிந்தவுக்கு விரைவில் பதிலடி கொடுப்பேன் சம்மந்தன்இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக தெரிவித்த கருத்தை நிராகரித்துள்ளார் சம்பந்தன்.
13 ஆம் திருத்தத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம், அதிகாரப் பகிர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை எனவும், மாறாக இலங்கையிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாத விடயங்களைக் கோருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ‘தி ஹிந்து’விற்கு தெரிவித்திருந்தார்.


எனினும், பிரதமரின் இந்த குற்றச்சாட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக மறுதலித்துள்ளது.


பேச்சுவார்த்தைக்கான அனைத்து விடயங்களும் தமது தரப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் இந்த கருத்து தொடர்பில் விரைவில் பதில் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.Powered by Blogger.