விதவைகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய மாடுகளை ஆட்டயப் போட்ட எம் பிமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சில அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்து பினாமிகளை வைத்து இயக்கிக்கொண்டு புலம்பெயர் உறவுகளை வைத்து வளைத்துப் போட்டு முன்னாள் போராளிகளையும், விதவைகளையும் வைத்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தினை பெற்று தானும் தனது பரிபாரங்களும் பிரித்து எடுத்த கதைகள் பல உண்டு.விதவைகளுக்கு வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பல  திட்டங்கள் புலம்பெயர் உறவுகளுக்கு முன்வைக்கப்படுகின்றது. அதில் ஒரு திட்டம் மாடுகளை வழங்குதல்.

புலம்பெயர் உறவுகளால் நிதி திரட்டப்பட்டு குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பப்படுகிறது.

பின்னர் விதவைகளுக்கு மாடுகள் வழங்கப்பட்டதாக புலம்பெயர் உறவுகளுக்கு  அறிக்கை அனுப்பப்படுகின்றது.

ஆனால் யாருக்குமே மாடு வழங்கப்படவில்லை. இத் தகவல் நிதி வழங்கிய  புலம்பெயர் உறவுகளுக்கு செல்கின்றது. 

உசாரடைந்த அவர்கள் திட்டத்தைப் பார்வையிட வருகின்றார்கள். தகவலறிந்த பாராளுமன்ற உறுப்பினரோ மாடு வளர்க்கும் சிலரைப் பிடித்து அவர்களின் மாடுகளை ஓரிரு நாட்களுக்கு வாடகை அடிப்படையில் பெற்று மாடுகளை குறித்த விதவைகளின் வீடுகளில் கட்டி வைத்துவிட்டு திட்டத்தை பார்வையிட வந்தவர்கள் பார்வையிட்டுவிட்டு சென்ற பின்னர் மாடுகளை அவிழ்த்துக்கொண்டு மாட்டின் சொந்தக் காரர்களிடம் கொடுத்துவிடுகிறார்.

இவ்வாறு பல கதைகள் உண்டு.

இது யார் என்பதை Comment இல் கூறுங்கள் 
Powered by Blogger.