தேர்தலில் திறமைமிக்க புத்திஜீவிகளுடன் களமிறங்கும் கருணா!நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் நேற்று (05 ) இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும், குறித்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திறமைமிக்க புத்திஜீவிகள் இளைஞர்களை இணைத்துக்கொண்டு தனித்துவமாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.Powered by Blogger.