ஸ்ரீலங்காவில் மர்ம நோய்! இளைஞன் உட்பட இருவர் திடீர் மரணம்ஸ்ரீலங்காவில் மர்ம காய்ச்சலால் இருவர் உயிரிழந்த நிலையில் இன்புளூவன்ஸா காய்ச்சல் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலையில் மர்ம நோய் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சல் என்ன என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்பதனால் சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் இந்த மர்ம காய்ச்சலால் ஸ்ரீலங்காவில் மீண்டும் இன்புளூவன்ஸா காய்ச்சல் தலைதூக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் பரவும் காய்ச்சல் என்ன என்பதனை அடையாளம் கண்டு சிகிச்சை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


உயிரிழந்தவர்களில் ஒருவர் 18 வயதுடைய இளைஞர் என்பதும் அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.