வெளிநாட்டு சக்திகளின் சதியிலிருந்து விடுபட்ட பிள்ளையான்



கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உருவாக்கம், அதன் பின்னணி பற்றியெல்லாம் மிக விரிவாக நாம் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம். 










அக் கட்டுரைகளில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் நிதானத்துடன் பிள்ளையான் செயற்படவேண்டும் என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தோம்.





கிழக்குத் தமிழர் ஒன்றியம் கிழக்கிலே பிள்ளையானையும், பிள்ளையானின் கட்சியையும் இல்லாமல் செய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.








பிள்ளையானுடனும், அவர் கட்சி சார்ந்தவர்களுடனும் இவர்கள் பேசும்போது கட்சியின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் பெயரையும் கட்சியின் படகு சின்னத்தையும், தலைவர் , செயலாளரையும் மாற்றி பொதுவாக செயற்படவேண்டும் என்று பேசியுள்ளனர்.





கிழக்கிலே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் உள்ள ஒரு கட்சி வாக்குகளே அற்ற தேர்தல்களில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட கிழக்குத் தமிழர் ஒன்றியத்தை நம்பி கட்சியையும், சின்னத்தையும் விட்டுக்கொடுக்க முடியுமா?








கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 959 வாக்குகளைப் பெற்ற சூரியன் சின்னத்தை தெரிவு செய்த இவர்களால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 45000 க்கு மேல் வாக்குகளைப் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் அதன் சின்னம் படகையும் இவர்களால் தெரிவு  செய்ய முடியாமல் போனது ஏன்?





தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும், அதன் சின்னத்தையும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதே இவர்களது திட்டம்.





கிழக்கில் பிள்ளையான் பலமான ஒரு சக்தியாக இருக்கக்கூடாது பிள்ளையானை இல்லாமல் செய்யவேண்டும் என்பதே இவர்களது எண்ணம்.





ஆனாலும் இவர்களின் சதி வலையில் சிக்காது முடிவுகளை பிள்ளையான் எடுத்துள்ளார்.



எமது முன்னைய கட்டுரையிலிருந்து




கிழக்குத் தமிழர் ஒன்றியம் 





 இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன அரசியல் பலம் உண்டு. இவர்களின் கீழ் ஒன்றிணைய இவர்களுக்கு என்ன அரசியல் பலம் உண்டு.





கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுமே பலமான மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள்.


இக் கட்சிகள் ஏனைய கட்சிகளை அழைப்பதில் தவறில்லை ஆனால் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் இணைவதற்கு கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்கு  என்ன வாக்கு வங்கி இருக்கின்றது.











அனைத்துக்கும் அப்பால் இக் கூட்டமைப்பில் இணையும் கட்சிகளின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகும் என்பதுடன் அக் கட்சி மக்கள் மனங்களிலிருந்து இல்லாமல் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.


குறிப்பாக கிழக்கிலே உருவாகி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று குறித்த வாக்கு வங்கியை வைத்துள்ள பிள்ளையானின் கட்சி இல்லாமல் ஆக்கப்படும்.


ஒட்டுமொத்த்த்தில் இத் தமிழர் கூட்டமைப்பானது மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் அரசியல் முகவரி தேடும் ஒரு அமைப்பாகும். பல உதிரிக் கட்சிகள் அரசியல் இலாபம் தேடவும், செல்வாக்குள்ள கட்சிகளை வைத்து அரசியல் அடித்தளத்தினை இடவும் எத்தணிக்கும் ஒரு கூட்டத்தின் சதி வலைகளில் சிக்காது கிழக்கை பாதுகாப்பதே சிறந்த்து.







கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.