பிள்ளையான் வியாளேந்திரன் இணைந்து தேர்தலில் போட்டி?



எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. 





ஒன்று பட்டு ஒரே சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவெடுத்தார்களானால் பாராட்டப்படவேண்டிய விடயம். கிழக்கிலே ஆளுக்கொரு கட்சியாக பிரிந்து வாக்குகளை சிதறடித்து அனைவரும் ஒன்றுபட்டு தமிழரின் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும். 





தங்களுக்குள் முட்டிமோதும் நிலையை நிறுத்தி புரிந்துணர்வோடு கிழக்கு அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு ஒரே சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதே கிழக்கு மக்களின்  எதிர்பார்ப்பும். 





பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தனது முகநூலில் "தனித் தமிழர்களாகவே போட்டி! யார் யாருடன் இணைந்து போட்டி என்று புதன்கிழமை இறுதித் தீர்மானம் ! வியாழேந்திரன் MP"  எனக்குறிப்பிட்டுள்ளார். 





அதே போல் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சந்ரு தலைவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கிழக்கிலே வியாளேந்திரன் உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றாக ஒரே சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று கூறியதாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார் 







சந்ருவின்  முகநூல் பதிவு





"இன்று தலைவரை சந்தித்து பல விடயங்களை பேசியிருந்தேன்.


கிழக்கு மாகாண அரசியல் களம், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.


பறிபோகும் கிழக்கை மீட்கவும் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் கிழக்கிலே தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.



வியாளேந்திரன் உட்பட கிழக்கின் மீது பற்றுள்ள அனைவரும் ஒன்றுபட்டு ஒரே சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதே தலைரின் எதிர்பார்ப்பும்.




வியாளேந்திரன் அவர்களுக்கு எதிராக நான் எழுதியதாக தலைவரிடம் சிலர் குறிப்பட்டதாகவும் கூறினார்.




என்னுடைய பதிவு ஒன்றில் வியாளேந்திரனின் சாரதி எமக்கு எதிராக கருத்திட்டதனால் அங்கு இருவருக்குமிடையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டன என்றும், ஆனால் பேக் ஐடிகளிலோ இணையத்தளங்களிலோ நான் வியாளேந்திரனை விமர்சிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினேன்.




கிழக்கிலே தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு பயணிக்கவேண்டும் எனும் நோக்குடன் பயணிக்கும் எம்மை குழப்புவதற்காக பேக் ஐடிகளில் விமர்சிப்பதையும் எமக்குள் குழப்பங்களை தோற்றுவிப்பதையும் நோக்காக கொண்டு சிலர் செயற்படுகின்றனர்.


கிழக்கின் விடிவுக்காக வியாளேந்திரன் உட்பட அனைவரையும் ஒன்றாக இணைத்து பயணிக்கவேண்டும் என்பதே எனது எண்ணமும்."



எனக் குறிப்பிட்டுள்ளார். 










கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.