நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கிலே தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்களை எடுத்துவருகின்றன.
இக் கூட்டு தொடர்பில் அனைவரும் தமது கவனத்தை திருப்பியுள்ளதுடன் கிழக்கிலே பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கேள்விக் குறியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இக் கூட்டினை குழப்புவதற்கான முயற்சிகள் பல பக்கங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இக் கூட்டு தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது கவனத்தை செலுத்தத்தொடங்கியுள்ளனர்.
கிழக்கிலே பலமான ஒரு அரசியல் சக்தி இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்.
தேர்தல் காலங்களில் தமது ஆட்டத்தை ஆரம்பிக்கும் அமீர் அலி இத் தேர்தலிலும் தமது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரித்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்பதை நன்கு அறிந்த அமீர் அலி தனது நரித்தனமான திட்டமிடல்களையும் காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டுள்ளார்.
அதில் ஒன்றுதான் தனது மேற்பார்வையின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 8 தமிழர்களை களமிறக்குவது
இதனால் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
தனது திட்டத்திற்கு கணேசமூர்த்தியை வளைத்துப் போடவும் அமீர் அலி பல முயற்சிகளை எடுத்துள்ளார்.
மட்டக்களப்பின் மீது அதிக அக்கறையும் பற்றும்கொண்ட கணேசமூர்த்தி அமீர் அலியின் திட்டத்திற்கு துணை போகமாட்டார் என நம்புகிறோம்.
கடந்த காலங்கள் பாடமாக அமையட்டும்