நான்கு மாணவிகளை பலாத்காரம் செய்த வைத்தியர்பாடசாலை மாணவிகள் நான்கு பேரை, பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் அம்பாறை, உகன சேனரத்னபுர கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்களின் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,


மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்பதற்கு வைத்திய பரிசோதனை அவசியம் என தெரிவித்து குறித்த மாணவிகள், வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.


இந்நிலையில், வைத்திய பரிசோதனைகளின் பின்னர் தாம் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக குறித்த மாணவிகள், பொலிஸாருக்கு வழங்கியுள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.


இதன்போது, 14, 17 மற்றும் 18 வயதுடைய மாணவிகளே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, வைத்திய பரிசோதனைகளுக்காக மாணவிகள், அம்பாறை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எவ்வாறாயினும் கைதுசெய்யப்பட்ட வைத்தியர், அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (07) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.Powered by Blogger.