கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விரைவில் தரமுயர்வுகல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பாக இன்றைய தினம் 07.01.2020 செவ்வாய்க்கிழமை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜானக பண்டார தென்னக்கோண் அவர்கனை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வுக்கு அடிப்படையாக அமைந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை கையளித்ததுடன் மிக குறுகிய காலத்தில் இதனை முழுமையான தரமுயர்விற்கு உட்படுத்த இதுவரையில் குறித்த அமைச்சரின் கைகளில் கிடைக்கப் பெறாத ஆவணங்களை மேற்கோள்காட்டிஎதிர்வரும் காலங்களில் கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கான நற்செய்தியை குறித்த அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் தரமுயர்த்தி கொடுப்பதற்கான உறுதிமொழியினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில்; ஒரு சில அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தி வந்த ஏமாற்று அரசியல்வாதிகளினால் குறித்த ஆவணங்கள் இதுவரையில் குறித்த அமைச்சரின் கரங்களுக்கு கிடைக்கபபெறவில்லையென்பது வேதனையான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் திரு.துஸ்யந் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதி தேர்தல் கோட்டாபய ஆதரவு கட்சிகளின் தேர்தல் மேடைகளில் பேசப்பபட்ட விடயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.