ரஞ்சன் ராமநாயக்கவை ஐ.தே.கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை


ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்க தலைமைத்துவம் தீர்மானித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க மீதான ஒழுக்காற்று விசாரணைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் பின்னர் அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


அதேவேளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாயக்க போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்காதிருக்கவும் பரிசீலிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஒலிப்பதிவு செய்த ரஞ்சன் எம் பியின் செயற்பாடு கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Powered by Blogger.